இந்தியா, பிப்ரவரி 12 -- Lord Sun: நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வரக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் நாயகனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியில் சூரிய பகவான் சனிபகவானின் சொந்தமான ராசியான கும்ப ராசிக்கு செல்கின்றார். சூரிய பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூற...