இந்தியா, மார்ச் 5 -- Lord Siva Temple: கல் தோன்றா, மண் தோன்றா காலத்திலேயே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி என கூறப்படுகிறது. அந்த தமிழ் மொழியின் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர் சிவபெருமான். தமிழ் மொழியின் நாயகனாக சிவபெருமான் விளங்கி வருவதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

அதன் காரணமாகவே நமது தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் மிகப்பெரிய போர்களை செய்து வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். ஒரு பக்கம் போர் செய்து வந்தாலும் மறுபக்கம் தாங்கள் சிவபெருமான் மீது கொண்டுள்ள அதீத பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் மிகப்...