இந்தியா, ஜனவரி 29 -- Lord Siva: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். பல திருவிளையாடல் நடத்திய சிவபெருமானுக்கு பல மன்னர்கள் மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்துள்ளனர். அப்படிப்பட்ட கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை மிகப் பிரம்மாண்டமாக வரலாற்று சரித்திர குறியடாகத் திகழ்ந்து வருகிறது.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கும்பகோணம் அருகில் இருக்கக்கூடிய தேவராயன் பேட்டை அருள்மிகு மச்சபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோவிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மச்சபுரீஸ்வரர் எனவும் தாயார் குந்தலாம்பிகை என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

மச்சான் அவதாரம் எடுத்த விஷ்ணு பகவான் இங்கு சிவபெருமானை வழிபட்டுள்ளார். அதனை உணர்த்தும் விதமாக கோயிலின் முக...