இந்தியா, பிப்ரவரி 8 -- Lord Murugan: உலகத்தில் வாழக்கூடிய அனைத்து தமிழர்களுக்கும் ஆதி கடவுளாக திகழ்ந்து வருபவர் முருகப்பெருமான். தமிழர்களின் கடவுளாக, தனி கடவுளாக முருக பெருமான் திகழ்ந்து வருகின்றார். சிவபெருமானின் இளைய மகனாக விளங்கக்கூடிய முருக பெருமான் தமிழ் மொழியின் நாயகனாக திகழ்ந்து வருகின்றார்.

உலகத்தில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் முருக பெருமானுக்கு கோயில்கள் இருக்கும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் முருகப்பெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறுபடை வீடுகள் கொண்டு முருக பெருமான் நமது தமிழ்நாட்டின் காட்சி கொடுத்த வருகிறார். ஒவ...