இந்தியா, பிப்ரவரி 9 -- கிளப் நட்புப் போட்டிகள் நடந்து வருகிறது, இதில் இன்டர் மியாமி- ஒலிம்பியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது மெஸ்ஸி அங்கம் வகிக்கும் இன்டர் மியாமி. முன்னணி கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும் ஒரு கோல் பதிவு செய்ததுடன் கோல் போட ஒரு உதவியை (assist) செய்தார். மெஸ்ஸி மாற்று வீரராக விளையாட வந்ததும் எதிரணி வீரர்கள் கைதட்டினர். போட்டி நிறைவடைந்த பிறகு மெஸ்ஸியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

2022 உலகக் கோப்பை வெற்றியாளரான மெஸ்ஸி முதல் பாதியில் கோல் போட்டார், லூயிஸ் சுவாரெஸின் அற்புதமான பாஸை கோலாக மாற்றினார். இந்த ஜோடி மன நிறைவுடன் கட்டித் தழுவி கோலைக் கொண்டாடியது.

பின்னர் அர்ஜென்டினா மிட்பீல்டர் ஃபெடரிகோ ரெடோண்டோ 44 வது நிமிடத்தில் கோல் போட்டு அணியின் கோலை 2-0 என்று முன்னில...