இந்தியா, அக்டோபர் 19 -- மதுரை: தமிழகத்தில் பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இன்று பாஜகவில் இணைந்தனர். மதுரை சிறுபான்மை அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கார்த்திகேயா உடன் பல்வேறு கட்சிகளில் இருந்து500க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்த இணைப்பு விழா மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ராம சீனிவாசன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ...