இந்தியா, பிப்ரவரி 12 -- தமிழ்நாட்டில் பலவிதமான உணவுகள் பிரபலமாக உள்ளன. தமிழ்நாட்டின் உணவுகளுக்கு வெளிநாடுகள் வரை பெயர் உள்ளது. அந்த அளவிற்கு வெளிநாட்டினரும் தமிழ்நாட்டு உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் தமிழ்நாட்டில் செய்யப்படும் அசைவ உணவுகள் என்றால் அனைவருக்கும் தனி பிரியம். அசைவ உணவுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட சுவையுடன் இருப்பதால் அதிகமாகவும் அசைவ உணவுகளை சாப்பிடும் பழக்கம் நமது வீடுகளில் உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் செய்யப்படும் அசைவ உணவுகள் கூடுதல் சுவையுடனும் கூடுதல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். இந்த வரிசையில் ஆட்டுக்கறி உணவுகள் பல நன்மைகளை நமக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. ஆட்டுக்கறியை சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் ஆட்டுக்கால் என்றாலே நமக்கு நினைவுக்கு வருகிறது சூப்பு தான். ஆட்டுக்கால் ச...