இந்தியா, ஏப்ரல் 7 -- 2019 ஆம் ஆண்டு வெளியான வெற்றிப் படமான லூசிஃபரின் தொடர்ச்சியான 'எல்2 எம்புரான் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும் வசூலில் 250 கோடி தாண்டி சாதனை படைத்திருக்கிறது. எம்புரான் படத்தில் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தைக் காட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படமானது மறுதணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டது.

மேலும் படிக்க | L2 Empuraan: தள்ளாடும் தமிழ் சினிமா.. தாக்குப்பிடிக்கும் தெலுங்கு சினிமா..கே.ஜி.எஃப் 1 சாதனையை சாய்த்த எம்புரான்!

அதில், படத்தில் மொத்தமாக 24 இடங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டது. இதற்கிடையே படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலத்தின் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. கூடவே, மற்றொரு தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூருக்கும், நடிகர்-இயக்குநரான பிரித்விராஜ் ச...