இந்தியா, பிப்ரவரி 2 -- பொதுவாக நாம் ஒரு சேமிப்பு கணக்கை துவக்கும் போது, அடையாளச் சான்றையும் இருப்பிடத்திற்கான சான்றையும் வங்கிகள் நம்மிடமிருந்து வாங்குவது கட்டாயம். அந்த அடையாள அட்டைகளில் வங்கிகள் சரிபார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் மற்றும் முகவரியைக் கொண்டே கணக்கு துவங்கப்பட்டு கொடுக்கப்படும். அதைத்தான் வங்கி வார்த்தைகளில் KYC (Know Your customer) என்பார்கள்.

KYC ஆவணங்கள் கொடுத்து துவக்கப்பட்ட கணக்கிற்கும் சிறிது ஆண்டுகள் கழித்து வங்கி தரப்பிடமிருந்து KYC யை புதுப்பித்துக் கொள்ளும்படி அழைப்புகள் வந்த வண்ணமுள்ளன. "நாங்க முன்னாடியே அக்கவுண்ட் ஓபன் பண்ணும் போதே எல்லாமே குடுத்தாச்சே ! திரும்ப ஏன் கேக்குறீங்க ?"என்று வாடிக்கையாளர் தரப்பிடமிருந்தும் வாக்குவாதங்கள் எழுகின்றன. KYC புதுப்பித்தல் தொடர்பான ஆண்டு கெடு குறித்தும் கே.ஒய்...