இந்தியா, மார்ச் 5 -- பிரபல நடிகையான குஷ்பு தன்னுடைய கணவர் குறித்தும், தங்களுக்குள் இருந்த காதல் குறித்தும் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.

இது குறித்து அவர் பேசும் போது, "நான் இங்கு ஒன்றை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். எனக்கு அருமையான கணவரும் அழகான மகள்களும் கிடைத்திருக்கிறார்கள்.

என்னுடைய அப்பா எனக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததை, நான் சுந்தர் சி யிடம் காதலிக்க தொடங்கிய போதே சொல்லிவிட்டேன். இன்றும் வீட்டில் அவரும், என்னுடைய மகள்களும் என்னை கலாய்த்து தள்ளுவார்கள். அப்போது நான் போன் செய்தால் சுந்தர் சி.. இப்போதுதான் உன்னை பற்றி பேசிக் கொண்டிருந்தோம் என்று சொல்வார். மேலும் வெளியில் தான் நீ புலி; வீட்டில் நீ வெறும் எலி என்று கிண்டல் அடிப்பார்.

என்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளிடமும், நண்பர்களிடமும்...