இந்தியா, பிப்ரவரி 9 -- Kudumbasthan Saanve: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மணிகண்டன் பார்க்கப்படுகிறார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான திரைப்படம் 'குடும்பஸ்தன்'. அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மிடில் கிளாஸ் குடும்பத்தை நடத்தும் ஒரு சாமானியனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தது.

முழுக்க, முழுக்க காமெடியாக அணுகப்பட்ட இந்தத்திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 'குடும்பஸ்தன்' திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்திருந்தார். வெண்ணிலா கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தி இருந்த நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் படிக்க: Kudumbasthan On OTT: மிடில் கிளாஸ் பையனின் வாழ்க்கை.. ஓஹோ வரவேற்பு.. 'குடும்பஸ்தன்' ஓடிடி ரீலீஸ் எப்ப...