இந்தியா, பிப்ரவரி 27 -- தேங்காய் சட்னி, கறிவேப்பிலை சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி என்பது தினமும் வீட்டில் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால், அப்படி செய்யும் சட்னியை எப்போதும் ஒரேமாதிரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஆந்திரா ஸ்டைலில் அதாவது கோவக்காயை பயன்படுத்தி ஒரு முறை செய்து அசத்துங்கள். கண்டிப்பாக இந்த கோவக்காய் சட்னி செய்துபாருங்க நாவில் சுவை ஒட்டும். தினமும் காலை, இரவு வேளைகளில் இட்லி, தோசைக்கு கொஞ்சம் வித்தியாசமாக வைத்து சாப்பிடலாம்.

இட்லி, தோசை மட்டுமின்றி சப்பாத்திக்கும் இதை சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். சுடச் சுடச் சாதத்தில் விறவி கூட சுவையை கூடுதலாக்கி சாப்பிடலாம். இந்த சுவையான கோவக்காய் சட்னி தயார் செய்வதற்கு முதலில் கோவக்காயை நல்லா வதக்கி எடுக்கணும். அப்பதான் நமக்கு சுவையான சட்னி கிடைக்கும். சரியாக வதக்கவில...