இந்தியா, பிப்ரவரி 7 -- கோயம்புத்தூரில் அமைந்துள்ள AI தொழில்நுட்பம் சார்ந்த 'சாஸ்' ஸ்டார்ட்அப் நிறுவனமான கோவை டாட் கோ நிறுவனம் 140 ஊழியர்களுக்கு 14 கோடி ரூபாய் போனஸை வழங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவரால் கடந்த 2011ஆம் ஆண்டு கோவை.கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக அந்நிறுவனம் ஈட்டி வருகிறது. 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு உடையதாக அந்நிறுவனம் மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வளர்ச்சி அனைத்தும் வெளியில் இருந்து முதலீடுகளை பெறமால் நிறுவனத்தின் லாபத்தை கொண்டே வந்துள்ளது இந்நிறுவனத்தின் மற்றொரு சிறப்பாக உள்ளது.

இந்த நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனஸாக அளித்தது உள்ளதன் மூலம் அந்நிறுவனம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறத...