இந்தியா, பிப்ரவரி 3 -- கொத்து பரோட்டாவை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் கொத்து தோசையை சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். அதை செய்வது எப்படி என்று பாருங்கள். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதும் எளிது. நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்தும் விட முடியும். இந்த கொத்து தோசைக்கு என்று நீங்கள் தனியாக சட்னி எதுவும் செய்யத் தேவையில்லை. அப்படியே கூட சாப்பிடலாம். ஆனால் சட்னி வேண்டும் என்பவர்கள் தேங்காய் சட்னியை அரைத்துக்கொள்ளவேண்டும். அது சிறந்த காம்போவாக இருக்கும்.

தோசை மாவு - ஒரு கப்

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - ஒரு கொத்து

முட்டை - 1

மல்லித்தழை - சிறிதளவ...