இந்தியா, ஏப்ரல் 4 -- நோய் தொற்று அச்சுறுத்தல் உள்ள இந்த காலகட்டத்தில் உட்கார்ந்த முறை வாழ்க்கை என்பது பலருக்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு வகைகளில் உடல் நலமானது தீங்கடைந்துள்ளது. கணிப்பொறி சார்ந்த வேலை பார்ப்பவர்கள் அலுவலகத்தை காட்டிலும் வீட்டில் சற்று கூடுதலான நேரம் வேலை பார்க்கின்றனர். இதனால் கண்களுக்கு மட்டுமின்றி மூட்டு பகுதிகள், தசைகள் உள்பட உடலின் பிற பாகங்களும் விறைப்புத்தன்மை அடைகின்றன. வயதானவர்களுக்கு மட்டுமின்றி, நீண்ட நேரம் உடலுக்கு அசைவுகள் கொடுக்காமல் கணிப்பொறி முன்னே அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூட்டு வலி பெரும் தொல்லையாகவே இருந்து வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக உடல் பருமன் மூட்டு வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாக உள்ளது. உடலின் கூடுதலான எடை, மூட்டு இணைப்பு பகுதிகளில் சிரமத்தை அதிகரிக்க செய்யும். அதேபோல் வ...