இந்தியா, மார்ச் 5 -- ஒரு சமையலறையில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்று தான் கத்தி, இது இல்லாமல் காய்கறிகளை வெட்ட முடியாது. மேலும் இதுவே சமையலுக்கு பிரதான ஆதாரமாக விளங்குகிறது. ஒரு சிலர் அவர்களது வீட்டில் வித விதமான கத்திகளை வைத்திருப்பார்கள். ஆனால் அந்த கத்திகள் வேகமாக துரு பிடிக்க வாய்ப்புள்ளது அல்லது கத்தியின் முனைகள் தேயவும் வாய்ப்புள்ளது. இதற்கு மக்கள் கத்தியை பாராமரிக்கமால் விடுவது தான். நீங்கள் எதையாவது தீவிரமாக வெட்ட முயற்சிக்கும்போதுதான், கத்தி போதுமான அளவு கூர்மையாக இல்லை என்பதை நீங்கள் உணருகிறீர்கள். பல வருடங்களுக்கு முன்னர் கத்திகளை ஒரு சாணைக்கல்லில் தேய்த்து கூர்மையாக்குவார்கள். இப்படிச் செய்தால் இரும்புக் கத்திகள் கூர்மையாகிவிடும், ஆனால் துருப்பிடிக்காத எஃகால் செய்யப்பட்ட கத்திகள் இப்படிச் செய்தால் கூர்மையாகாது.

எ...