இந்தியா, பிப்ரவரி 13 -- உலகின் முதல் பொதுவுடமை உணர்வு என்றால் அது காதல் தான். காதல் என்றும் எந்த வேற்றுமைகளையும் பார்ப்பதில்லை. காதலைத் தான் அனைவரும் எந்த வித பேதமின்றி கொண்டாடி தீர்ப்பார்கள். அந்த வகையில் காதலர்கள் கொண்டாடும் ஒரு முக்கியமான மாதம் தான் பிப்ரவரி, இந்த மாதத்தில் வரும் காதலர் தினம் அனைவருக்கும் சிறப்பான ஒரு நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பல விதங்களில் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்திற்கு முந்தைய வாரத்தில் இருந்தே காதல் வாரம் தொடங்கி விடுகிறது. காதல் வாரம் ரோஜா தினத்தில் தொடங்கி சாக்லேட் தினம், புரோபோஸ் தினம் என வரிசையாக வந்து காதலர் தினத்திற்கு முந்தைய நாளான இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது.

காதலர் வாரத்தின் ஏழாவது நாளான கிஸ் டே கிட்டத்தட்ட வந்துவிட்டது. உங்கள் மனைவி, கணவன், காதலி அல்லது காதலனுக்கு ...