இந்தியா, பிப்ரவரி 13 -- Kingdom: கௌதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வந்த VD12 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு நேற்று வெளியிட்டது. கிட்டத்தட்ட 2 நிமிடம் வெளியான டீசரின் முடிவில் படத்தின் பெயர் கிங்டம் என அறிவிக்கப்பட்டது.

இந்த டீசரில் வசனம், பின்னணி குரல், இசை, பிஜிஎம் என அனைத்தும் ஈர்க்கப்பட்டது. அதிலும் கதாநாயகனுக்கு கொடுக்கப்பட்ட சஸ்பெண்ஸ், கதைக் களத்தை உடைத்த விதம் அருமையாக இருந்தது என நெட்டிசன்ஸ் புகழ்ந்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா, கௌதம் தின்னனூரி கூட்டணியில் உருவாகி வரும் படம் 'கிங்டம்'. படத்தின் முன்னோட்டம் நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 12) வெளியிடப்பட்டது. இந்தப் படத்திற்கு குரல் கொடுக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின், படக்குழு அதிகாரப்பூர்வமாக அவர்களின் வ...