இந்தியா, பிப்ரவரி 6 -- கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு, ஓடும் ஆட்டோ ரிக்‌ஷாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இது தொடர்பாக, தாம்பரம் காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சேலத்தில் பணிபுரிந்து வந்தார். மாதவரத்தில் உள்ள தனது உறவினரைப் பார்க்க சேலத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏறினார்.

திங்கட்கிழமை இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகு, மாதவரத்திற்கு மற்றொரு பேருந்திற்காகக் காத்திருந்தபோது, ​​ஒரு ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் அவருக்கு ஒரு சவாரி வழங்கினார். அவர் மறுத்ததால், ஓட்டு...