இந்தியா, ஏப்ரல் 14 -- குழந்தைகளின் ஆரோக்கிய விஷயத்தை பொறுத்தவரை, அவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியிலும் பெற்றோர்கள் அக்கறை செலுத்துகிறார்கள். உடலிலுள்ள மற்ற உறுப்புகளைப் போல் குழந்தைகளின் பற்கள் விஷயத்திலும் தனியொரு கவனத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தகளின் வாய் பகுதியில் ஏற்படும் நோய் தொற்றுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

குறிப்பாக இனிப்பு பலகாரங்களை விரும்பு சாப்பிடுவதில் நாட்டம் கொண்ட குழந்தைகள் வீடு, கடை என எங்கு சென்றாலும் இனிப்பை கண்டால் ஒரு புடி பிடித்துவிடுவார்கள். அதேபோல் ஜங்க் உணவுகள் மீதும் அவர்களின் மோகம் அளப்பரியதாகவே உள்ளது. இந்த இரண்டு உணவுகளும் பற்களில் ஒட்டிக்கொண்டு துவாரங்கள் உருவாக வழிவகுக்கும். எனவே இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தொடக்கம் முதலே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கத்...