இந்தியா, மார்ச் 6 -- Kidney Stone : மனித உடலில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சிறுநீரக கற்கள்.. சிறுநீரகங்களில் கற்கள் உருவாகின்றன என்றால் எப்படி என்ற கேள்வி எழுகிறது அல்லவா.. அப்படி உருவாகி விட்டால் வலி‌ நம்மை ஒரு வழி செய்து விடும். வலியில் படுத்து உருளுவதும் சத்தம் போடுவதும் என்று ஆளை‌ ஒரு மாதிரி ஆக்கிவிடும். இத்தகைய கேள்விகளோடு மதுரையை சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ம.ஜானகி அவர்களிடம் கேட்ட போது தெளிவாக விளக்கினார்.

சிறுநீரக கற்கள் என்பது இரு பாலருக்கும் எல்லா வயதினருக்கும் பொதுவானது. நமது உடலில் சேரும் அதிகப்படியான உப்பு, பொட்டாசியம், கால்சியம், யூரியா போன்ற பல்வேறு தாதுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன. இந்த கழிவுகளை வெளியேற்ற முடியாமல் போகும் போது இந்த தேவையற்ற தாதுக்கள் சிறுநீரகங்களில் ப...