இந்தியா, பிப்ரவரி 16 -- திருச்சி பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் உடலில் தண்ணீர் அதிகம் சேர்வதால் ஏற்படும் பாதவீக்கம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு பரிந்துரைக்கும் மூலிகை என்னவென்று பாருங்கள்.

கால் மற்றும் பாத வீக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நீர் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றம் அடையாமல் தேங்கி விடுவதுதான் காரணம் ஆகும். உடலில் தேங்கிய நீர்க்கழிவுகளை நீக்க வல்ல மிகச் சிறந்த மூலிகை பெரு நெருஞ்சில் எனப்படும் யானை நெருஞ்சில் ஆகும்.

யானை நெருஞ்சில் செடியை பிடுங்கி வந்து, அதை நீரில் முக்கி எடுத்தால், அந்த நீரின் தன்மை சற்றே திடப்பட்டு குழைவு தன்மை அடையும். இந்த நீரை காலை மாலை என இருவேளை தொடர்ந்து பருகி வந்தால். நீர் கழிவுகள் சிறப்பாக உடலை விட்டு நீங்கும்.

மேலும் வாழைத்தண்டு சாறு ஆறு மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது, நீர் க...