இந்தியா, பிப்ரவரி 19 -- Kettimelam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், வெற்றி தியாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஜெகன் மற்றும் மோனிகா ஆகியோர் வெற்றியை சந்தித்து, தியாவை தங்களுடன் அழைத்து செல்கின்றனர். இதையடுத்து துளசி மீண்டும் வெற்றிக்கு போன் செய்து நன்றி சொல்கிறாள். மேலும் பணம் கொடுப்பதாக சொல்ல, வெற்றி இதுக்கெல்லாம் எதுக்குங்க பணம் கொடுக்கறீங்க என்று சொல்கிறான்.

அடுத்து கவின் அஞ்சலியின் பெயரை ஒரு டைரியில் எழுதி வைத்து, குளிக்க செல்கிறான். இதற்கிடையே, வரதராஜன் ரூமுக்குள் வருகிறார். டைரியில் பெயரை பார்த்து விடுவார...