இந்தியா, பிப்ரவரி 14 -- Kerala Elephant Attack: கேரளாவில் நடந்த ஒரு கோயில் திருவிழாவின் போது இரண்டு யானைகள் தறிகெட்டு ஓடி தாக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி பகுதியில் வியாழக்கிழமை நடந்த கோயில் திருவிழாவின் போது இரண்டு யானைகள் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்தனர். கோயிலாண்டி, குருவன்காடு, மனகுளங்கரா கோயிலில் நடந்த கோயில் திருவிழாவின் போது இந்த கொடூர சம்பவம் நடந்தது. தற்போது இறந்தவர்களின் விபரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, லீலா (65), அம்முகுட்டி அம்மா (70), மற்றும் ராஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். யானைகள் தறிகெட்டு ஓடியதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூவரும் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் சுமார் 30 ப...