இந்தியா, நவம்பர் 25 -- ஒரு நாள் சிபிஐ பொறுப்பை எனக்குக் கொடுங்கள்... விரலைச் சொடுக்கி இப்படித்தான் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ஊழலை ஒழிக்கும் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். முதல்வன் படத்தில் நடிகர் அர்ஜுன் கேட்டதுபோல் இருந்தாலும் ஒரு முதல்வராக இருந்துகொண்டு அரவிந்த் கேஜ்ரிவால் இப்படிப் பேசியிருப்பதன் பின்னணியை கடைசியில் பார்க்கலாம். தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கேஜ்ரிவால் பேசியதாவது:

ஆம் ஆத்மி கட்சியால் மட்டுமே ஊழலை நாட்டிலிருந்து ஒழிக்க முடியும்.

ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை. தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி படுக்கை, சோபா மெத்தைகளை கிழித்து எறிந்தனர். ...