இந்தியா, பிப்ரவரி 3 -- Kayal Serial: கயல் சீரியலில் இருந்து இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் என்னென்ன நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன என்பதை சீரியல் குழு புரொமோவாக வெளியிட்டு இருக்கிறது.

அதில், ஏற்கனவே விபச்சார வழக்கில் தவறுதலாக சிக்க வைக்கப்பட்ட கயல் காவல் நிலையத்தில் அவதிப்பட்டு கொண்டிருந்தாள். இதற்கிடையே தற்போது புதிதாக அதே காவல் நிலையத்தில் எழிலும் ஒரு புகாரில் சிக்கி வந்து நிற்கிறான். கயல் ஒரு பக்கம் இந்த விஷயம் நம் குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று தவித்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் அவள் எழிலை பார்ப்பது போல காட்சி நிறைவடைகிறது.

எழிலை பார்த்த பின் அவள் என்ன செய்வாள்? எழில் என்ன குற்றத்தில் சிக்க வைக்கப்பட்டான் உள்ளிட்ட விவரங்கள் இன்றைய எபிசோடில் இடம்பெற இருக்கின்றன.

கடந்த எபிசோடில், ஒரு பெண் மூலமாக கயலை திட்டமிட்டு வீ...