இந்தியா, ஜனவரி 31 -- கயல் சீரியல் தொடர்பாக இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில் கௌதம் கயலை மடக்கி உன்னுடைய இரக்க குணமே உனக்கு எதிரியாகிவிட்டது பார்த்தாயா? என்று கேட்க, கயல் அவனை முறைத்து பார்த்தாள். இன்னொரு பக்கம் வேதவள்ளி போலீஸ்காரருக்கு போன் செய்து, இதை மட்டும் செய்தால் உங்களது பெயர் ஊர் முழுக்க நன்றாக பரவும் என்று சொல்ல, அவர் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

அப்படியே கட் செய்தால், மற்றொரு பக்கம் கயல் கௌதமிடம் எழில் முன்னதாக அடித்ததை குறிப்பிட்டு, அவர் உன்னை அடித்ததை மறந்து விட்டாயா என்று சொல்லி எச்சரிக்கை விடுக்க, அவனோ அதற்கும் சேர்த்தும் தான் உன்னை நான் பழி வாங்கப் போகிறேன் என்று கூறுகிறான். தொடர்ந்து அவளை கெளதம் நெருங்க, கயல் அவளை எச்சரிக்கிறாள். அத்தோடு புரொமோ முடிவடைகிறது.

கயல் சீரியலின் கடந்த எபிசோடில், ஷாலினி கயல் அம்மா சொன...