இந்தியா, பிப்ரவரி 10 -- Kayal Serial: அன்பு- ஷாலினி திருமணத்தால் நின்று போன வளைகாப்பை தேவி ஆசைப்பட்ட படியே நடித்த கயல் பல முயற்சிகளை செய்து வருகிறார். ஷாலினி செய்த காரியத்தால் தேவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய விக்னேஷிடமும், அவரது அம்மா வேதவள்ளியிடமும் கயல் எவ்வளவோ நிலைமையை எடுத்துச் சொல்லியும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும் கயல் தன் முயற்சியை கை விடவில்லை.

எத்தனை அவமானப் படுத்தினாலும், தங்கையின் வாழ்க்கைகாக கயல், விக்னேஷையும் வேதவள்ளியையும் சந்திக்க தயாரானார். இதில் விக்னேஷ் மனது மாறி இருப்பதை அறிந்து கயல் சந்தோஷப்பட்ட நிலையில் அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறார் கயலின் பெரியம்மா வடிவு.

கயல் குடும்பத்தை பழிவாங்கும் எண்ணத்தை இன்னும் கைவிடாத வடிவு, இங்கு நடக்கும் அத்தனை சம்பவங்களையும் உடனுக்கு உடனே வேதவள்ளிக்கும் சிவசங்கரிக்கும...