இந்தியா, பிப்ரவரி 12 -- Kayal Serial: தேவியின் வளைகாப்பிற்காக வீட்டில் உள்ளவர்கள் நகை வாங்க கடைக்கு சென்றனர். அந்த சமயத்தில் வீட்டில் இருந்த ஷாலினி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் இவருக்கு என்ன ஆச்சு எனத் தெரியாமல் கயலின் அம்மா காமாட்சியும், தேவியும் பதறினர்.

பின், இவர்கள் ஷாலினியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக ஆம்புலன்சிர்கு கால் செய்தனர். பின் வீட்டில் இருப்பவர்களிடமும் அதுபற்றி கூறியுள்ளனர். பின், நகை வாங்க சென்றவர்கள் அவசரமாக வந்தனர்.

ஷாலினிக்கு ஏற்பட்ட நிலை குறித்து, அன்புவிற்கு தகவல் சொல்வதற்காக அவரது தங்கை போன் செய்து விஷயத்தை கூறினார். ஆனால், நடந்தது என்ன எனக் கேட்காமலே அன்பு தன் வீட்டில் இருப்பவர்கள் தான் ஷாலினியின் இந்த நிலைக்கு காரணம் என நினைத்து கோவமாக பேசுகிறான். ஆனால், அதுகுறித்து எவ்வளவோ எடுத்து கூற முயற்சித்தும்...