இந்தியா, பிப்ரவரி 15 -- Kayal Serial: அன்பு- ஷாலினி திருமணத்தால் நின்று போன தன் தங்கை தேவியின் வளைகாப்பை நடத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறாள் கயல். இருப்பினும், தேவியின் ஆசைப்படி அவரது புகுந்த வீட்டார் ஆசியுடன் இந்த வளைகாப்பு நடக்க வேண்டும் என எண்ணி, பல முயற்சிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், விக்னேஷ் மேல் தான் வைத்திருக்கும் நம்பிக்கையால், கயல் தேவியின் வளைகாப்பு நிகழ்ச்சிகளை கோவிலில் தொடங்கினார். சிறிது நேரத்தில் சொந்த பந்தம் ஒவ்வொருவராக வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரத் தொடங்கினர்.

ஆனால், இன்னொரு பக்கம், அம்மா வேதவள்ளியின் பேச்சை தட்ட முடியாமலும், தன் மனைவியின் வளைகாப்பிற்கு செல்ல வேண்டும் என்ற ஆதங்கமும் ஏங்க விக்னேஷ் கலங்கி இருக்கிறார். இரண்டு எண்ணங்களும் மாறி மாறி வர துக்கத்தை தாங்காமல் கண்ணில் கண்ணீரோடு என்ன செய்வது எனத் தெரியாம...