இந்தியா, பிப்ரவரி 4 -- Kayal Serial: கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் கயலை விபச்சார வழக்கில் சிக்க வைத்த நிலையில், கயல் காவல் நிலையத்தில் காவலர்களிடம் தான் அந்த மாதிரியான பெண் கிடையாது என்று கெஞ்சி கேட்டு, தன்னை வெளியே விடும்படி புலம்பி கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த பெண் காவலர் மனதிற்குள் இன்ஸ்பெக்டர் இந்த சம்பவத்திற்காக ஏற்கனவே எழிலின் அம்மாவான வேதவள்ளியிடம் பணம் வாங்கி விட்டதாகவும், அந்த பணத்தில் தனக்கும் ஷேர் இருப்பதாகவும், அதனால் நீ என்ன கதறினாலும் உன்னை வெளியே விட மாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே கயலின் போனை மூர்த்தி தொடர்பு கொண்டான். இதையடுத்து, தன்னுடைய போன் அடிக்கிறது என்று சொல்லி கயல் காவலர்களிடம் கூறிய போதும், பெண் காவலர் கயல் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதற்கிடையே வேறொரு விஷயத்திற்காக அங்கு வந்...