இந்தியா, பிப்ரவரி 14 -- Kayal:சன் டிவியில் இரவு 7:30 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகிவரும் நெடுந்தொடர், கயல். இந்த சீரியலில் பிப்ரவரி 14ஆம் தேதியில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்துப் பார்ப்போம்.

இன்றைய எபிசோட்:இதுவரை தேவி மனதைக் காயப்படுத்திய அவரது கணவன் வீட்டார், அவளது உயிரையே எடுக்க முயற்சிசெய்திருக்கிறார்கள். ஆனால், அது அவர்களது வீட்டில் இருந்து கயல் வீட்டிற்கு மருமகளாக வந்த ஷாலினி உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், இதுதான் நடந்தது.

விக்னேஷ் அனுப்பியதாகக் கூறி, கயல் வீட்டிற்கு வந்த பிரியாணி பார்சலை, காமாட்சி வாங்கி வந்து, தேவியிடம் தருகிறாள். தன் மருமகன் மனது மாறி, தேவி மீது அன்பாக மாறிவிட்டதாக எண்ணி, இதனை தேவியிடம் கொடுத்தார். அந்த நேரத்தில் தேவிக்கு போன் வரவே, அது தன் கணவன் விக்னேஷாக...