இந்தியா, ஏப்ரல் 3 -- தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க:- Watermelon: 'தர்பூசணி பழங்களை மக்கள் அச்சமின்றி சாப்பிடலாம்!' உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பல்டி!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஏப்ரல் 02ஆம் தேதி அன்று "கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து", முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தக் கடிதத்தை எழுதிய...