இந்தியா, பிப்ரவரி 19 -- Karuppu Kavuni Rice Biryani: கருப்புக்கவுனி என்னும் பாரம்பரிய அரிசியில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி, ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இத்தகைய சத்துக்கள் கொண்ட கருப்புக்கவுனி அரிசியைப் பயன்படுத்தி கருப்புக் கவுனி அரிசியில் பிரியாணி செய்வதை அறிவது ஒரு சத்தான உணவினை பற்றி அறிந்துகொள்வதற்குச் சமம்.

சரி, கருப்புக்கவுனி அரிசியில் பிரியாணி செய்வது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

ஒரு கிளாஸ் கருப்புக்கவுனி அரிசியை எடுத்து நன்கு கழுவிக்கொள்ளுங்கள். அந்த கருப்புக் கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து விடுங்கள். சரியாக ஊறவைக்க நேரமில்லாதவர்கள் குறைந்த பட்சம் 6 மணி முதல் 7 மணி வரை கருப்புக்கவுனியை நீரில் ஊறவைத்துவிட்டு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்வது நல்லது.

இப்போது நாம் குக்கரில் த...