இந்தியா, பிப்ரவரி 12 -- Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரமேஸ்வரி பாட்டி, சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரியை பார்த்ததும், நீங்க எதுக்கு வந்தீங்க என கோபப்படுகிறாள். இப்படியெல்லாம் நடக்கும் என தெரிந்து, ராஜராஜன் ஏற்கனவே பரமேஸ்வரி பாட்டியிடம் தனியாக வரவேண்டாம் என்று சொல்லி இருந்தார்.

இதனால் பாட்டி ஊர்காரர்களுடன் வந்திருக்க, அவர்கள் பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க என சத்தம் போடுகின்றனர். பரமேஸ்வரி பாட்டி எங்க மேல தப்பு இருந்ததால், இத்தனை வருஷமா நாங்க தள்ளி இரு...