இந்தியா, பிப்ரவரி 3 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கடந்த எபிசோட்டில் மகேஷ் குடிபோதையில் பேசியதை வீடியோவாக பதிவு செய்த மயில்வாகனம, அதை சாமுண்டீஸ்வரி இடம் கொடுத்து நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது வீடியோவில் ஆடியோ இல்லாமல் இருக்க மயில்வாகனம், சாமுண்டீஸ்வரியிடம் சிக்கி கொள்கிறார். சாமுண்டீஸ்வரி எதுக்கு இப்படி எல்லாம் செய்றீங்க என மயில்வாகனத்தை திட்டுகிறாள்.

அதனைத் தொடர்ந்து மயில்வாகனம் தன்னை சிக்க வைத்த மகேஸ்வரியை ஏதாவது செய்ய வேண்டுமென யோசிக்கிறான். இந்த சமயத்தில் துர்கா காரில் இருந்து ஒரு பொருளை எடுத்துச் செல்ல, ரவுடி ஒருவன் அவளிடம் பிரச்சினை செய்கிறான். அதனை மயில்வாகனம்...