இந்தியா, ஜனவரி 28 -- Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மாயா சாமுண்டீஸ்வரியிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் மாயாவை வர சொன்ன இடத்திற்கு வந்து விடுகின்றனர். கார்த்திக் தூரத்தில் மறைந்திருக்க, மயில் வாகனம் முகத்தை மறைத்தபடி நிற்கிறான். அதே போல் மாயா மற்றும் மகேஷ் என இருவரும் முகத்தை மறைத்தபடி வருகின்றனர். இருவருக்கும் எதிரில் இருப்பது யார் என்ற குழப்பம் உருவாகிறது.

மாயா பணத்தை கொடுக்க, மயில் வாகனம் அதை வாங்கிக்கொண்டு மகேஷின் முகத்திரையை கிழித்து அவனை பிடிக்கி...