இந்தியா, பிப்ரவரி 10 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில், கார்த்திக் தன் மீது விழுந்த பழியை போக்க வேறொரு வழி இருப்பதாக சொல்லிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் மீண்டும் பஞ்சாயத்தை கூட்டுகிறான். தப்பு நான் தானே செய்தேன். அதனால், நானே கட்டிக் கொள்கிறேன் என்று சொல்ல, குற்றம் சாட்டிய பெண் சிவனாண்டி சொல்லி தான் இப்படி செய்ததாக உண்மையை சொல்லி விடுகிறாள்.

இதனால், கார்த்தியின் மீது விழுந்த பழி உண்மை இல்லை என்பது உறுதியாக, சிவனாண்டியை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். சிறையில் இருக்கும் சிவனாண்டி, எப்படியும் ரெண்டு நாள்ல வெளிய வந்துருவேன் ...