இந்தியா, ஜனவரி 30 -- தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தி, தாத்தா ராஜா சேதுபதியை சந்திக்க கிளம்புவது போல் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ராஜா சேதுபதி உடல்நிலை சரியில்லாமல் இருக்க டாக்டர் அவரை பரிசோதனை செய்கிறார். பின்னர் பயப்படுற மாதிரி எதுவும் இல்லை, மருந்து மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என சொல்லி விட்டு செல்கிறார்.

இதையடுத்து கார்த்திக் வந்திருக்கும் தகவல் அறிந்து விருமன் உட்பட எல்லோரும் வீட்டு முன்பு கூடி விடுகின்றனர். ராஜராஜன்னு ஒருத்தன கூட்டிட்டு வரேன், கோவில் திருவிழாவை நடத்துறேன்னு சவால் விட்டயே என்ன ஆச்சு எங்க என்று கேட்கி...