இந்தியா, பிப்ரவரி 8 -- Karthigai Deepam Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜனுக்கு கார்த்திக் தன்னுடைய தங்கையின் மகன் என்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மாயா வீட்டில் மாயாவும் மகேஷும் திட்டமிட்டபடியே அந்த ட்ரைவரை ஊரை விட்டு துரதியாச்சு என்று நினைத்து சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் கார்த்தியை சந்தித்த ராஜராஜன் என் தங்கச்சி பையனா நீ என்று மிகுந்த சந்தோசப்படுகிறார். நானே உன்னை ஊரை விட்டு போக சொல்ற மாதிரி பண்ணிட்டேனே என்று வருத்தப்படுகிறார். அதற்காக ராஜ ராஜன் மன்னிப்பும் கேட்கிறார்.

அடுத்ததாக கார்த்திக் ராஜராஜனையும் பாட்டி பரமேஸ்வ...