இந்தியா, ஜனவரி 27 -- கார்த்தியின் திட்டத்தால் திக்குமுக்காடும் மாயா.. கையும் களவுமாக சிக்கப் போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் கார்த்தியிடம் மாயாவின் கருத்தடை மாத்திரை அட்டை சிக்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திக் மயில்வாகனத்திடம், மாயா தப்பானவள் என்பது தெரிந்து விட்டது; ஆனால், மகேஷூம் தப்பானவனாக இருந்தால் மட்டும் இந்த கல்யாணத்தை நிறுத்தலாம், இல்லன்னா கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும் என்று சொல்கிறான்.

மறுபக்கம் ரேவதி, ஆசிரமத்தில் தீபா என்ற குழந்தை தூங்கியதும், இன்னும் கொஞ்ச நாள் தான். தீபாவை நான் என...