இந்தியா, பிப்ரவரி 7 -- Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் இந்த ஊரிலேயே இருக்க கூடாது என பஞ்சாயத்தில் தீர்ப்பு சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வீட்டுக்கு வந்தது ராஜராஜன் கார்த்தியை வெளியே போக சொல்கிறார். அவர் யாருனு தெரிந்தா இப்படி சொல்லுவீங்களா என்று மயில் வாகனம் உண்மையை சொல்ல போக கார்த்திக் தடுத்து விடுகிறான்.

அடுத்ததாக சாமுண்டீஸ்வரி சாப்பிட உட்காரும் சமயத்தில் மயில் வாகனம், அத்தை நீங்க இப்படி செய்திருக்க கூடாது.. ட்ரைவர் எத்தனையோ நாள் இந்த வீட்டில் இருந்து இருக்கான். அவன் ஒருமுறையாவது நம்ம பொண்ணுகிட்ட இப்படி நடந்து இருக்கானா...