இந்தியா, பிப்ரவரி 15 -- Karkodeswarar: கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் மிகப் பெரிய பிரம்மாண்ட பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் இவர். உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசியை சிவபெருமான் வழங்கி வருகின்றார்.

குறிப்பாக இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ சிவ பக்தர்கள் இங்கு இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர்.

தமிழ் மொழியின் ஆதி கடவுளாக சிவபெருமான் வணங்கப்பட்டு வருகிறார். தெற்கு திசையை ஆண்டு வந்த மன்னர்கள் அனைவரும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்...