இந்தியா, ஏப்ரல் 2 -- காந்தாரா: சாப்டர் 1 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சமூகவலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில், அதனை காந்தார படக்குழு மறுத்திருக்கிறது. இது தொடர்பாக காந்தார படக்குழு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில், ரசிகர் ஒருவர் காந்தாரா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறதா? என்று பதிவிட்ட பதிவை வெளியிட்டு, 'உங்களுக்கு சந்தேகம் வேண்டாம், தள்ளிப்போவதற்கு இடமில்லை. காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 2025 அக்டோபரில் நிச்சயமாக வெளியாகும்' என்று பதிவிட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | Kantara Chapter 1: களமிறங்கும் கடம்ப வம்சம்! - என்ன சொல்கிறது காந்தாரா 2?

இதைப்பார்த்த ரசிகர் ஒருவர், 'சந்தோஷமா இருக்கு! எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.' என்று பதிவிட்டு இருக்கிறார். இன்னொருவர், "புதிய போஸ்டர்கள்...