இந்தியா, மார்ச் 25 -- Kannappa Movie: தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள புராண கதைப்படம் கண்ணப்பா. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரகுபாபு கண்ணப்பா படம் பற்றியும் அதனை விமர்சிப்பவர்கள் பற்றியும் கூறிய கருத்துகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மஞ்சு விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்ணப்பா திரைப்படம் தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கொண்டுள்ளார் விஷ்ணு. இந்த புராணப் படத்தை முகேஷ் குமார் சிங் இயக்குகிறார். சிவபெருமானின் அடியாரான கண்ணப்பா கதாபாத்திரத்தில் விஷ்ணு நடித்துள்ளார்.

மேலும் படிக்க: சிவனாக அக்ஷய்.. பார்வதியா காஜல்.. ருத்ராவாக பிரபாஸ்.. கண்ணப்பா டீசரில் இன்னும் யாரெல்லாம்...