இந்தியா, பிப்ரவரி 11 -- போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லை என்று நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக அரசு மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் உடன்நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில், காலை 8 மணி முதல் பொதுமக்கள் காத்து இருக்கின்றனர். மருத்துவரின் பெயரையோ அல்லது மருத்துவரின் தொலைபேசி எண்ணையோ தர மறுக்கின்றனர். மதுரை சிறப்பாக மருத்துவர்கள் செயல்படுகின்றனர். ஆனால் சென்னையில் மருத்துவர் சரியாக கவனிப்பது இல்லை. இங்கு மருத்துவமனையில் ஏசி, பேன் உள்ளிட்டவை ஓடிக் கொண்டு இருக்கிறது. ஏராளமான மக்கள் காத்து இருக்கின்றனர். ஆனால் இன்னும் மருத்துவர் வராமல் அவதியுற்று வருகின்றனர் என கஞ்சா கருப்பு கூறி உள்ளார் .

மேலும் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு ...