இந்தியா, பிப்ரவரி 16 -- Kanimozhi : பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு மக்களிடம் திணிக்க முடியாது. மேலும் மத்திய அரசு மத்திய அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக எம்பி கனிமொழி குற்றம் சாட்டி உள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த கைது நடவடிக்கையை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் தமிழக மீனவர்கள் மீது பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதை உடனடியாக ரத்து செய்யக் வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டச்‌ செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம...