இந்தியா, ஜனவரி 26 -- பொதுவாக சமூக வலை தளங்களில் எப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் கங்கனா ரனாவத் தான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்று மனம் திறந்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் எப்போதும் சமூகவலைதங்களில் ஒளிவு மறைவின்றி கருத்துகளை தெரிவித்து வருவார். இவரது கருத்துக்கள் பல சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடும். இந்த நிலையில் சமீபத்தில் கங்கனா ஒருவருடன் கை கோர்த்த படி இருந்த புகைப்படம் வெளியானது. அந்த நபரைத்தான் கங்கனா காதலிப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் எனது "ஹேர் ஸ்டைலிஸ்ட் " என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்று இருந்த கங்கனா ரனாவத் அங்கு தொழில் அதிபர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து அந்த தொழிலதிபரை கங்கனா ரனாவத் காதலிப்பதாக தகவல்கள் ...