இந்தியா, பிப்ரவரி 15 -- Kangana: பெண்கள் வீட்டு வேலைகளில் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும் என்று தனது தாய் தன்னிடம் கூறிய நாட்கள் இருந்ததாக நடிகை கங்கனா ரனாவத் ஒப்புக் கொண்டுள்ளார்.

ப்ரூட் இந்தியா என்ற ஒரு ஊடகத்தில் நேர்காணலின் போது, இதுபோன்ற விஷயங்களைச் சொல்வது தனது தாயின் முட்டாள்தனம் என்று தான் நினைத்ததாக நடிகை கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் கூறியதாவது, "என் அம்மா அடிக்கடி ஒன்றை சொல்வார். ஒரு பெண்ணாக பிறந்தால், வீட்டு வேலைகளில் அதிக நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக, ஊறுகாய் தயாரிப்பது முதல் நெய் தயாரிப்பது வரையும், வீட்டில் காய்கறிகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்பார். அப்போது ஏன் நமது அம்மா இப்படி முட்டாள்தனமா பேசுறாங்கன்னு நினைச்சேன். அப்படி இருப்பதால் நமக்கு ...