இந்தியா, ஜனவரி 31 -- நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைய உள்ளதாக வெளியான செய்திகளுக்கு நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் முன்னிலையில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர்.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இணைந்து உள்ளனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு, தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக இந்த பொறுப்பு மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வியூகங்களை வகுத்தல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், தவெக கட்சி தொடர்பான ஊடக செயல்பாடுகள், வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறியதல், தவெகவுக்கு சாதகம் மற்றும் பா...